புரிந்திடச் செய்யும் துயர்

காந்த விழியால் கவர்ந்திடும் கன்னியின்
கூந்தல் கலைந்ததேன் கூறு .

பூத்ததேன் நீலம் பொலிவானக் கண்களில்
காத்திருப்பால் வந்தவினை யோ ?

கலங்கும் விழியில் கவலையின் ரேகை
நலமிலை யென்றே சொலும் .

விரிந்தக் குழலும் வழியும் விழியும்
புரிந்திடச் செய்யும் துயர் .

வருத்த முறைந்த வனிதை வதனம்
மெருகு குறைந்து விடும் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Sep-15, 11:44 pm)
பார்வை : 136

மேலே