கதையின் கருவுக்காக கொலை செய்யப்படும் கற்பனை கதாபாத்திரங்கள்

தி இந்து தமிழில் இன்று (செப்-30 ல்) 14 ம் பக்க இறுதியில் வந்திருக்கும் ஒரு நிமிடக் கதை..

மூன்றாவது படிக்கும் தன் மகளை நெரிசலான ஆட்டோவில் ஒரு இடம் பிடித்து பள்ளிக்கு அனுப்பி விட்டு வரும் மருமகளிடம் மாமனார் கெஞ்சுகிறார்...
நாங்க சாகுற வரை இந்த வீட்டுல வாழ, ஒரு மூலைல இடம் கொடும்மா உனக்கு புண்ணியமாப் போகும் என்று மாமனார் கதறுவது போல கதை அமைப்பு..

முதுமைக்கு ஆதரவு முக்கியம் தான்.. ஆனால் யாரும் இப்படிக் கெஞ்சிக் கேட்பதில்லை,

அவர்களின் இயலாமை ஒருபுறம் இருந்தாலும் இப்படி தவறாக சித்தரிப்பது மருமகள்களையும் மாமனார் மாமியாரையும் கொல்வதற்குச் சமம்..
அந்த அளவுக்கா கொடுமைகள் நடக்குது.... கதையின் கருவுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வதென்பது தான் கொடுமை.....ச்ச்ச்ச்சே

இதைப்போலவே டி வி யிலும் அநேகமாக எல்லா சீரியல்களிலும் கொல்லாமல் கொல்லுகிறார்கள்.

இதுவே
இலக்கிய கொடுமை!
சிந்தனை வெறி.!

எழுதியவர் : செல்வமணி (30-Sep-15, 11:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 157

சிறந்த கட்டுரைகள்

மேலே