மனமே நீ மாறிவிடு

மனமே நீ மாறிவிடு.
மதியை மயக்கும் மங்கை மோகம் - உன்
மகத்துவத்தை மறைத்துவிடும். - ஆதலால்
மனமே நீ மாறிவிடு.

மூடிவைத்த நீர்க் குடம் போல் - நின்
மதியை மாசுபடாமல் தேக்கிவை.
சதியாய் தூண்டும் - அந்த
சாகசக்காரியின் அழகால் எழும்
சபலமெனும்தூசு வீழாமல் ஊக்கிவை.

அஞ்சாமல் கெஞ்சாமல் - உன் வெளி
அங்கத்தின் மேனியை தொடுவாள்.,
ஆபத்தாய் முடியும் அது அறுவாள்-நீயும்
அலைதொட்ட கரையாய் கரைவாய் - ஆதலால்
மனமே நீ மாறிவிடு.

பெண்களின் அழகில் விஷமுடையது -அவர்களின்
பொலுவில் எழும் பொய்யுரை சொற்களே.
கொலுவில் வைத்தப் பொம்மை ஒன்று
கவிழ்ந்து உடைந்தார்ப் போல் - உன்
கண்ணியத்தையும் உடைப்பார்கள்.- ஆதலால்
மனமே நீ மாறிவிடு.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (1-Oct-15, 5:53 am)
பார்வை : 130

மேலே