வெள்ளந்தி
“ஏம்ப்பா சாப்புடாமா போயிட்ட..?”
“மறந்து போயிட்டேன்ம்மா..!”
“பாத்துப்பா! சாப்பாட்ட மறந்தமாதிரி
பரீட்சைக்கு படிச்சத மறந்துடாத,
அப்புறம் பெயிலாயிடுவ..!”
“படிச்சத மறந்துடுவோம்ன்ற பயத்துலதாம்மா
அடிக்கடி சாப்பாட்டை மறந்துட்றேன்.!”
“இன்னும் வெகுளியாவே இருக்கிறீயேப்பா..;
ஊட்டச்சக்து உடம்புல கலந்தாதானப்பா
அறிவு சக்தி விரிவடையும்…!”
“அறிவு ஜீவிகளெல்லாம் அதிகமா சாப்பிட கூடாதாம்மா
அளவோடுதான் அதுகூட அளந்துதான் சாப்பிடுனும்மா…”
“அந்த மேதாவித்தனமெல்லாம் நமக்கெதுக்குப்பா,
மேம்போக்கா படிச்சி மேலே வந்தா போதும்ப்பா..!”
“ நீ கூட என்னைப்போலவே
இன்னும் வெகுளியாவே இருக்கிறியேம்மா
நாம வெகுளியாவே இருந்தாக்கா
எந்த பொறம்போக்கும் மதிக்கமாட்டான்ம்மா..!”
“நீ சொல்றது சத்தியமா
நூத்துக்கு நூரூ உண்மைடா மகனே!
உங்கப்பன் வெகுளியா இருந்ததாலதான்
இந்த சிறுக்கிய கட்டிக்கிட்டான்!
இந்த சிறுக்கி வெகுளியா இருந்ததாலதான்
இந்த கிறுக்கன பெத்துக்கிட்டேன்!
இன்னும் நீ வெகுளியாவே இருந்தியின்னா
உனக்கு வாய்க்கப்போறவளும்
வெள்ளந்தியா இருப்பான்னு என்னடா நிச்சயம்?”
“சரி, சரிம்மா! போய் சாப்பாடு எடுத்து வைய்யி..
வியித்துக்கு வஞ்சனைப்பண்ணா…
வாய்க்கப்போறவளோட எப்படி கூத்தடிக்கிறது,
காலாகாலத்துல நீ எப்போ பாட்டி ஆகறது…!
நிலத்தை நல்லா உழுதாதானே விளைச்சளூ..!
பழத்தை நல்லா புழிஞ்சாதானே பழச்சாறு..!”
“பேச கத்துக்கிட்டடா மகனே!
நல்லா பேசக்கத்துக்கிட்ட..!
வெள்ளந்தின்னு நினைச்சேன்
அந்த விஷயத்துல நீயும்
நலதமயந்தின்னு நிருபிச்சிட்ட..!”
“ஊத்துக்குளி வெண்ணை திரண்டு வர்றத
பாத்துக்கிட்டு சும்மா நிக்ககூடாதும்மா
வழக்கப்படி எல்லாம் ஒழுங்கா நடந்தாதாம்
சம்சாரம் என்னை எப்பவும் மதிப்பா..!”