மரியாதை
வேகமாக விரைந்துக்கொண்டிருந்த ரயிலில்
அந்த பெரியவர்,
எதிரே அமர்ந்து
[அடிக்கடி,காற்றில் கலையும் கூந்தலை ஸ்டைலாக நீவி விட்டுக்கொண்டே ]போனில் பேசிக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை கவனித்துக்கொண்டிருந்தார்.
எதைப்பற்றியும் கவலைப்படாத அவளின் தொலைபேசி உரையாடல் இவ்வாறாக இருந்தது.
''ச்சீ...போடா ''
''எனக்கும் கெட்ட பேச்சு பேச தெரியும்..தெரியும்ல...''
''டேய்..இதெல்லாம் ஓவரு..''
[இப்படி சொல்லும்போது,அவள் முகம் செல்லமாக கோப பட்டது.]
அடுத்து,
''டேய்..உம்பேச்சு எல்லை மீறுது..நான் நாளைக்கு கால் பண்றேன்..''பேசி ,போனை வைத்தவளிடம்,அந்த
முதியவர் சிரித்துக்கொண்டே,
''யாரும்மா அது..உன் காதலனா ?''என்றார்.
அவள் அலட்டிக்கொள்ளாமல்,
''இல்லீங்கய்யா..சஸ்ட் பிரண்ட் தான் ''என்றாள்.
அவருக்குள் அதிர்ச்சி.
அதை காட்டிக்கொள்ளாமல்,
''இப்படி ஒரு பிரண்டு தானா..இல்ல ,நிறைய பேர் இருக்காங்களா..?என்றார்.
அவள்,முகம் சிவந்து,''இது உங்களுக்கு தேவை இல்லாதது..''என்று சொல்லிவிட்டு ,ஜன்னல் பக்கமாக
திரும்பிக்கொண்டாள்.
பெரியவர் நிதானமாக வெற்றிலை பொட்டலத்தை பிரித்தவாறு,
''இல்லம்மா..எனக்கு உன் வயசுல ஒரு மக இருக்கா..இங்க தான் படிக்கிறா..உனக்கும் என் வயசுல ஒரு அப்பா இருப்பாரு..ம்ம்..நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதே..'' என்றார்.

