இப்படி தான்
கூட்டம் கூடும் இடங்களில்
ஓரமாய் நின்று
மனிதர்களே என்று கத்தி அழைத்தேன்.......
யாரும் திரும்பி பார்க்கவில்லை.
இந்தியர்களே என்று கத்தி அழைத்தேன்...
யாரும் திரும்பி பார்கவில்லை.
தமிழர்களே என்று அழைத்தேன்..
யாரும் திரும்பி பார்கவில்லை.
ஜாதி பெயர் சொல்லி கத்தி அழைத்தேன்..
அந்தந்த ஜாதியில் உள்ளவர்கள் அனைவரும்
திரும்பி பார்த்தனர்..
~~தாகு