காதல் குறுங்கவிதை தொடர் 03 -முஹம்மத் ஸர்பான்
நினைவுகளின் பாதையில்
சுவாசங்கள் புதுமொழி
விரல்கள் கோர்த்து விழிகள் சேர்ந்து
மெளனம் பேசும் காதலின் வேதம்
அருகிலிருக்கும் உன்
அழகு எனும் அருவியில்
நனைய ஆசை கொள்கிறேன்.
இலைகளுக்கிடையில்
ஒழிந்த பனி மூட்டமும்
உன் சம்மதம் கேட்கிறது