உன் புன்னகை எனக்கு மட்டும்

... """ ""...

அதிகாலையின் பனிபோல
அடிமதுரத்து கரும்பாக
பூபாளம் இசைத்துவரும்
பூலோக ரம்பையவள் !!!

வசந்தத்தின் தேரொன்று
ஊர்வலமாய் நடந்துவர
ஏதோவொரு ஏக்கம்
எனக்குள்ளே உருவாக !!!

செதுக்கிவைத்த சிற்பமாய்
சிந்தையை திருடிவிட்டு
ஒன்றும் தெரியாதவளாய்
மென்றுபோகிறாள் என்னை !!!

இது என்ன மாற்றமென்று
எனைனானே கேட்டாலும்
விடையில்லா கேள்வியாக
விதியோடு விளையாடியே !!!

தேகம் தீண்டும் தென்றலாய்
தேன் சுரக்கும் பூக்களாய்
தேவதையின் தலைவியாய்
மஞ்சத்து பெண்ணிவளோ !!!

சிரித்தவளோ சிறைபிடித்து
சிணுங்கியவள் விழிஈர்த்து
சிருங்காரி உனக்கு மட்டும்
எப்படித்தான் சாத்தியமோ !!!

செவ்விதழ் தான்விரித்து
சின்னதாய் புன்னகைத்து
பேசாமல் கொல்லுகிறாள்
உயிர்பறித்து செல்கிறாள் !!!

வான்விட்டே இறங்கிவந்த
என் வீட்டு வெண்ணிலவே
பொன்னகை மின்னவில்ல
என்னவளின் புன்னகையே !!!

அன்றும் இன்றும் என்றும் காதலுடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (3-Oct-15, 11:55 am)
பார்வை : 755

மேலே