சொல்லும் பொருளும்

1.தாருகன்- அரக்கன்
2.புள்- புறா
3.இந்து- நிலவு
4.புயல்- மேகம்
5. ஏதம்- குற்றம்
6. கல்- மலை
7. செறு- வயல்
8. வாள்- ஒளி
9. மடங்கல்- சி்ங்கம்
10. இருள்- பகை
11.நடலை- துன்பம்
12. நமன்- எமன்
13. உழுவை- புலி
14. குருசு- சிலுவை
15. தேட்டை- செல்வம்
16. மல்லல்- வளமை
17. விசும்பு- வானம்
18. ஊறு- புலன்
19. மருங்கு- பக்கம்
20. யாக்கை- உடம்பு
21. குறலை- புறம் பேசுதல்
22. விபுதர்- புலவர்
23. ஐயை- தாய்
24. மதுரம்- தேன்
25. பன்னகம்- பாம்பு
26.கலிங்கம்- ஆடை
27. கண்டம்- கழுத்து
28. கடி-மணம்
29. கால்- காற்று
30.வாரி- கடல்
31. இவுளி- குதிரை
32. நுனை- கூர்மை
33. புரி- முறுக்கு
34. உரவு- வலிமை
35. கலம்- பாத்திரம்
36.திருக்கம்-வஞ்சனை
37.முறை-நீதி
38. நிறை- கற்பு
39.காசினி- நிலம்
40.கோது- குற்றம்
41.களவம்- சந்தனம்
42.போது- மலர்
43.மதுரம்- இனிமை
44.புவனம்- உலகம்
45.தானை-படை
46. கசடு- குற்றம்
47.மாடு- செல்வம்
48.நனி- மிகுதி
49.தொழும்பர்- அடியார்
50. ஏத்தும்-வணங்கும்

எழுதியவர் : திருக்குமரன் (3-Oct-15, 1:35 pm)
பார்வை : 157

மேலே