மறவாமல் மணக்கும் மலர்கள்
மறவாமல் மணக்கும் மலர்கள்
உன் திருமுகத்தை
அர்த்த நாரீஸ்வரராய்
ஒருமுகமாக்கி
என் இதயத்துள் பூசிக்கிறேன்..
உன் வாசத்தை சுவாசமாக்கி
வாழ்கிறேன் உயிரோடும் மனசோடும்
வெட்கப்படாமல் பூபூக்கும்
உன் பசுமையான நினைவுகளை
இதயத்துக்குள் பதியமிட்டு பாதுகாக்கிறேன்.
என்னை நானே
நான் நானாகவே இருந்தும்
உன்னை
பிரிய மறுக்கிறது நினைவுகள்
நிமிடங்கள் மாறி யபோதும்
நினைவுகள் மாறுவதில்லை
நிமிடங்களாக பிரிந்த போதும்...
அன்று ஒருநாளில்
என் கரங்களில்
நீ கொடுத்த மலர்கள்
நம்மை பேச வைத்தன
அமைதியாக மணம் பரவிவிட்டு...
உன்னுள் நான் அழுகிறேன்
என்னுள் சிரிக்க விடாமல்
கண் களுக்குள்
கண்ணீரை வரவேற்று....
இருந்தும் பாதுகாக்கிறேன்
நீர் ஊற்றி உரம் போட்டு
நம் நினைவுகளை....