ஏதோ சோகம்
ஏதோ ஒரு
சோகம்
வந்து தாக்கும்
நேரம்......நினைவில்
நெருங்கும்
உந்தன்
வதனம்.......
நெஞ்சுக்குள்ளே
தூறல்
கண்டேனடி
அன்று......காண்கிறேனே
இப்போது......
மனக் குமுறல்
தினமும்......
நேற்றுவரை
இல்லாத
காயம் .......
இனி நாளெல்லாம்
எனக்கு
காயம் தான்......
வீசிடும்
தென்றல்
என்னோடு பேசுமென்று
காத்திருந்தேன்......
அனல் வீசி
காயமாய் போனேன்......
மனசால்
அணைத்தால்
அவ்வளவு சுகம்
உயிராய்
நேசித்தால்
அவ்வளவும்
சுகம்.......
நல் வாழ்வு
கிட்டுமென்று
உன் வாழ்க்கை
கேட்டேன்......
நீ......இன்றி
என் வாழ்வு
பாழானதே.....?!
நான் காணும்
ஆகாயம்
வெற்றிடமாய்
மாறிப் போனது......
என் வாழ்வும்
ஏனோ மாயமாய்
மௌனித்துக் கொண்டது.......
மாளிகை
மணி மண்டப
வாழ்வு கேட்கவில்லை
மண் குடிசை
வாழ்க்கை என்றாலும்
மனம் பிடிச்சவளோடு
வாழத்தானே
ஆசைப் பட்டேன்......