டேப்லெட்

காலையில் வந்திருந்த அன்றைய நாளிதழை ஓரங்கட்டி விட்டு கையிலிருந்த டேப்லெட் மூலம் செய்திகளை படித்துக் கொண்டிருந்த கணவனிடம் மூச்சிரைக்க வீட்டிற்குள்ளிருந்துஓடி வந்த மனைவி கேட்டாள்,

"அத்தான்! உங்க பக்கத்துல சும்மா கிடக்குற பேப்பரை சீக்கிரமா எடுத்து தாங்க. எனக்கு தேவைப்படுது"

அவளைப் பார்த்து நக்கலடித்துக் கொண்டே கணவன் சொன்னான்,
"உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு! இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருக்கியே! பேப்பரை எல்லாம் விட்டுட்டு பாரின்ல இருந்து நான் வாங்கிட்டு வந்திருக்கிற டேப்லெட்ட யூஸ் பண்ணிப் பாரு! உலகமே இதுக்குள்ளே இருக்கு. அசந்து போயிடுவ!"

அவன் நீட்டிய டேப்லெட்டை வாங்கி கொண்டு வீட்டிற்குள் ஓடினாள்.

அடுத்த சில விநாடிகளில் தொம் ..! என சத்தம் கேட்டது.

இவன் பதறி வீட்டிற்குள் ஓடினான். கிச்சனிலிருந்த அவன் மனைவி சந்தோஷமாகச் சொன்னாள்,
"நீங்க சொன்ன மாதிரி உங்க டேப்லெட் சூப்பரா யூஸ் ஆகுதுங்க. நானே அசந்து போயிட்டேன். இத வச்சு ஓங்கி அடிச்சதும் ஒரே அடில கரப்பான் பூச்சி எப்படி சுருண்டு செத்து கிடக்குதுன்னு பாருங்களேன் ...!"

எழுதியவர் : செல்வமணி (5-Oct-15, 12:30 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 149

சிறந்த நகைச்சுவைகள்

மேலே