கொட்டு முரசே

ஒரு கொலைக்கும்
இன்னொரு கொலைக்கும்
உள்ள தூரம்
மிக அருகில் தான் இருகிறது

கசாப்பு கடைக்காரனுக்கும்
அவன் நியாத்தின் கழுத்துக்கும்
இடையில் தான் கத்தியும் இருக்கிறது

ஆடு
தற்கொலைத்து போனதை
கத்தி சொன்னதை
யாரும் நம்புவதாக இல்லை

அக்கத்தியில் ஒழுகும் சாதிய சதை
சீக்கிரம் அறுக்கப்படுமென
கொட்டு முரசே!!!!!!!

எழுதியவர் : மு.சுந்தரபாண்டியன் (6-Oct-15, 7:36 pm)
பார்வை : 117

மேலே