தத்துவங்கள்-02

தத்துவங்கள்-02

தன் நிலை அறியானுக்குத் பெற்றோர் அன்பு வேண்டும்
தன் நிலை மாறானுக்குப் பொதுயுடைமை வேண்டும்...!

அனந்தனுக்குக் கோபுரம் எழுப்புவதை விட
அவலர் ஒருவர்க்கு உழுவை அளிக்கலாம்...!

ஈடணம் சேர்க்க கள்ளம் செய்பவனின் சுவடுகள்
ஏடுகளில் பதியாது...!

அகத் துய்மை உடையவன் அவை ஆழலாம்
புறத் துய்மை உடையவன் தன்னை ஆழ நினைப்பதும் தவறு...!

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒருவன் இராமணாகவும்
இன்னொருவன் இராவணாகவும் சித்தரிக்கப்படுகிறான்...!

வேடம் தறித்து மேடை ஏறியவன்-நடிகன்
வார்த்தை ஜாலம் கொண்டு உறவாடுபவன் மாகா நடிகன்...!

எவன் ஒருவனின் எண்ணம்,செயல்கள் மற்றவர் சிந்தைக்கு அப்பாற்படுகிறதோ
அவன் ஒருவனைப் பைத்தியம் என்பார்...!

எழுதியவர் : அ.பெரியண்ணன் (7-Oct-15, 1:05 am)
பார்வை : 128

மேலே