என் இந்தியா

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்????
அன்று கண்ணதாசன் கேட்ட கேள்வியை
மீண்டும் நான் கேட்கிறேன்......

மண் தோண்டி பயிர் வளர்த்து
உலகுக்கு எல்லாம் உணவு தர
நில வளம் உள்ளது நம்மிடம்.....

நிலக்கரி, தங்கம், தாது என
ஆயிரம் புதயலை அள்ளி தர
கணிம வளம் உள்ளது நம்மிடம்.....

கடல் தாண்டி வணிகம் செய்து
பணம் சேர்த்து வர
வணிக தந்தியம் உள்ளது நம்மிடம்...

அந்நிய நாடே கண்டு வாய் திறக்கும் அளவுக்கும்
அறிவில் சிறந்த பல்லாயிரம்
அறிவியல் மேதாவிகள் உள்ளனர் நம்மிடம்....

மறவன் சொன்ன வீரம் தொட்டு
கவி துறை, சொல் துறை, கட்டுரை துறை என
நம்மை மிஞ்ச யாரும் பிறக்கவில்லை....

உயிர் காக்கும் மருத்துவம் ஆகட்டும்
உயிரை எடுக்கும் அணு ஆயுதம் ஆகட்டும்
கண்டுபிடிப்பில் இன்னும் நம்மை யாரும் மிஞ்சவில்லை....

வெள்ளை புறா வளர்க்கும் அகிம்ஸை பூமி ஆகட்டும்
ரத்த ஆறு ஓடும் வன்முறை கலம் ஆகட்டும்
நம்மை மிஞ்ச யாரும் பிறக்கவில்லை....

அண்ணன் தம்பி பாசமகட்டும்
கவித்துவ காதல் ஆகட்டும்
நம்மை போல உறவை நேசிப்பவர் எங்குமில்லை...

சக தோழனே,
இத்தனை செல்வங்களும்
அழிவில்லா வளங்களும் இந்த சொர்க்க பூமியில் இருக்க
ஏன் ஓடுகிறாய் அந்நிய நாட்டை தேடி....

அடுத்த தலைமுறையே,
நீயாவது பேராசையை விடுத்து
உள்ள செல்வதை அனுபவித்து
தலைவனாக வாழு நாம் சொந்த நாட்டில்....

அந்நிய நாட்டில் தலைவனாக இருப்பதை விட
சொந்த நாட்டில் அடிமையாக வாழ்வது மேல்
நினைவில் நிறுத்து.... தமிழனின் மானம் காத்து......

எழுதியவர் : பிரதீப் ரா (8-Oct-15, 10:46 am)
Tanglish : en indiaa
பார்வை : 1730

மேலே