திருக்குரல் - 01
" திருக்குரல் - 01 "
1. இப்பொழுது இல்லா இறைவன் இகபரத்தில்
எப்பொழுதும் இல்லா இறைவன்
2. தெய்வம் தொழுதாலும் சாவு வருவதால்
தெய்வம் தொழாமலே சா
3. கனவில் கடவுள் வருவதோ உண்மை
நனவில் வராததோ நன்மை
4. அருமை அறிவால் கடவுள் ஒழிப்போர்
பெருமை புகழுடன் வாழ்வர்
5. குற்றமாம் தெய்வம் தொழாது இருப்பதே
பெற்ற பிறப்பின் சிறப்பு
6. இடம்பொருள் காலமும் ஏவி திடமாய்
கடவுளை இல்லாமல் ஆக்கு
7. கடவுளை கல்லாய் சபித்த மனிதன்
திடமான சொல்லால்வாழ் வான்
8. துன்பம் தரும்தெய்வம் என்றும் மறப்போர்க்கு
இன்பம் எளிதாய் கிடைக்கும்
9. துன்பநோய் என்ற இறைப்பேய் எதற்குத்தான்
என்றும் மனிதனுக்குத் தேவை
10. பொருளான சொல்லால் கடவுளை என்றும்
பொருளிலாத சொல்லாக மாற்று