போகாதே நில்

மனமொரு சமயம் கூவுகின்றது..
முன்னேறிப் போ ..என்று..
பின்னோக்கி அடி வைக்காதே என்று..
மனம் கூவுகின்றது சில நேரம்!

புத்திக்கு இதில் விருப்பமில்லை
முன்னனுபவத்தால் தடுமாறி
வீழ்ந்த அக்கனங்களின் ஞாபகத்தால்
புத்தி கேட்கின்ற கேள்விக்கோர் பதில்
இல்லை.. பாழும் மனதின் வசம்..!

முன்னேறிச் செல்வதற்கு முன்னாலிருப்பது
என்ன ராஜ பாட்டையா..?
..அன்றி சீரான பாதைதானா ?..
என்றே ஆராய்கிறது புத்தி ..
மலைமுகட்டின் நுனியில் ஒரு மனிதன்
கீழேயோ ..
பல்லாயிரம் அடிஆழத்தில்
தெரிகின்ற பாறைகள்..பள்ளம்..!
முகட்டில் இருந்து ..
எட்டிப் பார்க்கின்ற ஒரு விஷ நாகம்
இதில் முன்னேறுவது தானா விவேகம்..
அன்றி..
பின்னோக்கி நடந்து
புது வழி காண்பதில் ஏன் சந்தேகம் ?

நெஞ்சமெலாம் வஞ்சினமும்
தீய மானுடரின் விடமும் கரம் சேர்த்து
முன் போகும் வழி செல்லாதே என
முத்திரை உபாயமொன்றை ..
புத்தி உரைக்கின்ற நேரம்
செவி மடுக்கா மதியற்ற மனம் சொல்லும்..
சற்று முன்னேறித்தான் போய் பாரேன் என்றே!

மனிதனும் சாதாரணன் தான்
தானாய் உணர்வதில்லை,
சொன்னாலும் புரிவதில்லை,
சிந்தித்து முடிவு செய்வதில்லை ..
எத்தனை முறை தோல்வியுற்றாலும்
மனதின் வழி செல்கின்ற ..மனிதன்
புத்தியின் சொல் பேச்சை கேட்பதில்லை !

எழுதியவர் : கருணா (9-Oct-15, 5:42 pm)
பார்வை : 284

மேலே