பரம்பொருளின் புலம்பல்
" பரம்பொருளின் புலம்பல் "
கையும் காலும் வலிக்குதே
செய்யும் வேலை சலிக்குதே
சேரும் இடமும் சறுக்குதே
ஊரும் உறவும் உறங்குதே
தேடிச் சென்றேன் பலனில்லை
ஓடிச் சென்றேன் பலமில்லை
பாடிச் சென்றேன் பயனில்லை
ஆடிச் சென்றேன் ஆனந்தமில்லை
மோட்சம் என்ற ஒன்றும் உண்டு - பார
பட்சம் என்ற நியதியும் உண்டு
கோஷம் போடும் வாழ்வும் உண்டு
தோஷம் எனநினைக்கும் கூட்டமும் உண்டு
காற்றில் தென்றல் பிறப்பது ஏனோ
வாழ்வில் வசந்தம் பறப்பது ஏனோ
கூட்டில் பறவை இருப்பது ஏனோ
போதும் என்ற மனம் இல்லாததும் ஏனோ