சாலைவாசிகளின் நிலவுக்கு வண்ணமிருக்கிறது

மாற்றி மாற்றி
போட்டுக் கொள்ளும் சட்டையில்
அவள் கணவனாகவும்
அவன் மனைவியாகவும்
மாறிக் கொள்கிறார்கள்...

கடைசி வாய்
சோற்றை விட்டுக் கொடுத்து
விடுகிறார்கள்
பக்கத்து வீட்டு பூனைக்கு...

கால்வரை போர்த்தி விடும்
அவளின்
பின்னிரவு குளிரை
கால் கொண்டே போர்த்தி
விடுகிறான் அவன்..

விளையாட்டுப் பெண்ணாகவே
இருந்தவளுக்கு
நிலவை விட்டு செல்கிறான்
தான் இல்லா மாலைகள் நிரப்ப...

மழையோ வெயிலோ
ஒழுகி விடும் வீட்டுக்குள்
தன் நிழல் கொண்டே
வெளி
அடைக்கிறார்கள், இருவரும்....

தாழ்பாள் அற்ற
கதவுகளை
அந்த வீதியில்
யாரும் திறந்து விடுவதில்லை....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Oct-15, 6:07 pm)
பார்வை : 278

மேலே