ஏரி - ஆத்மாநாம்
புதிய தாய்த் தோன்றிக்
காத் திருந்தது ஒரு ஏரி
எனக் காய்
கூர்மையான பக்கங் களைக்கொண்ட
பற்கள் தாறுமா றாய்ச்
சிதறிக் காத்தன
ஏரியை
அதன் விளையாட்டு ஓரங்களில்
வானம் தன் முக அலங்காரம்
சிரத்தையாய்ச் செய்து கொண்டிருந்தது
தூக்கணாங் குருவிகள் போற் சில புட்கள்
இங்கு மங்கும் விரைந்து கொண்டிருந்தன
செங்கற்கள் ஆகாத சில மண் சதுரங்கள்
ரயில்களின் போக்குவரத்தை
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன
ஏனோ நான் மட்டும்
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்