தலைக்கவசம் – நகைச்சுவைக் கவிதை 3

................................................................................................................................................................................................

தலைக் கவசமணிந்து
இரு சக்கர வாகனத்தில்
பச்சை சமிக்ஞைக்காக பார்த்திருந்த போது...
என்னையே பார்த்தபடி
என் போலவே வண்டியில்
இன்னொரு உருவம்..!

தயங்கிடத் தயங்கினார்;
வணங்கிட வணங்கினார்..!

மனைவியின் உறவினரோ?
மானேஜர் மருமகனோ?
மாதக்கடைசி கிராக்கியோ?
மளிகைக்கடை சிப்பந்தியோ

முகம் மறந்த நண்பனோ?
முதல்காதலி அண்ணனோ?
தனம் கொடுத்த வள்ளலோ?
தங்கைபின் சுற்றுபவனோ?

தலைக்கவசம் மறைத்ததால்
தவிக்கிறேன், நினைவில்லை
காலை முதல் மாலை வரை
கை காலும் ஓடவில்லை...!

அதே சாலை, அதே ஆள்..!
அடடா , அருகில் சென்றேன்..!

அலங்காரக் கடை முன்
ஆளுயரக் கண்ணாடி..!
........................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (10-Oct-15, 3:27 pm)
பார்வை : 474

மேலே