வீரப் பெண்மைக்கு - உதயா

எண்ணிலடங்க ஆசைதனை
உள்ளத்தில் ஊற வைத்து
எல்லையற்ற அன்புதனை
எக்கணமும் பொழியவைத்து

முள் படர்ந்த பாதைதனை
தன்னுள்ளே மறைத்து வைத்து
முழுநிலவு வாழ்வுதனை
தனக்காக மலர வைத்து

தான் கண்ட கனவுதனை
தடையின்றி நிறைவேற்றி
தான் விரும்பும் வாழ்வுதனை
தரணியில் நிலைநாட்டி

அந்த எரிமலை பிழம்புதனை அள்ளி
இருதய கூட்டில் அடைத்து
கடல் நடுவில் கண்புதைத்து
ஆனந்த கண்ணீரென்றே பொய் உரைத்து

குறைவில்லா சிறப்போடு
நித்தமும் வாழ்ந்திட
பெற்றெடுத்த கடவுள்கள்
பெரும் பாடுபட்டு அனுப்பிவைத்தால்

தினம் தினம் வசந்தங்கள்
கணம் கணம் வந்ததே
இன்றோ காலங்கள் மாறியதே
புது உறவுகளின் பிணைப்பாலே என்று

துன்பங்களின் வருகைகள்
தன் வாழ்வுதனில் நிகழ்ந்ததால்
தன்னால் துளித்தெழுந்த மழலைகளை
தனிமை படித்தியோ தன்னுடன் அழைத்தோ

போராடும் குணம் விடுத்து
பொறுமைதனை இழந்து விட்டு
மரணம் தேடும் மாதுவே
நீ மங்கை சிறப்புதனை குறைக்கலாமா..?

எழுதியவர் : உதயா (10-Oct-15, 3:04 pm)
பார்வை : 101

மேலே