ஓட்டு
அரசியல் வேண்டாம் அரசியல் வேண்டாம்... என்றே சில அரசியல் ஆசைகள்....
ஆளுக்கொரு கட்சி உண்டு....
ஏழைக்கொரு வாய் சுகமான கஞ்சி உண்டா....
நடிக்க தான் வாயை பிளந்து பார்த்தார்கள்....
குடிக்க தான் வாயை பிளந்து காத்தார்கள்....
தண்ணீரையும் காசுக்கு வித்துடுவாங்க....
கண்ணீரையும் காசுக்கு மறைச்சிடுவாங்க....
ஊழல்னு ஒருதன் கொடி பிடிச்ச போதும்....
மொத்த ஊழலும் ஒன்னாதன் சேரும்....
கூட்டமா அடிக்கடி ஆர்ப்பாட்டம் ரோட்டில....
திண்டாட்டமா ஓடி ஓடி ஒளியனுமாம் வீட்டில....
கல் இருக்கு கட்டை இருக்கு உடைச்சாச்சு எல்லாமே....
தில் இருக்கா திட்டம் இருக்க இருந்தாக்க உருப்படியா சொல்லுமே....
கதை கதையா கட்டுராங்க....
காதில தான் சுத்துராங்க....
கேட்டுக்கிட்டும் நிக்கிராங்க....
புத்தி கெட்டு குத்துராங்க...
ஓட்டு
!...உன்னோடு நான்
உனக்காக நான்...!