நான் ஒரு கலங்கிய நீரோடை

அற்பமான ஆர்வத்தினால்
அலட்சியமாய் இருக்கின்றேன்
இலட்சியத்தை விட்டு,
ஏனெனில்
நான் ஒரு கலங்கிய நீரோடை...

எனது முடிவுகள் அனைத்தும்
மதில் மேல் நிற்கும் பூனைகள்...
ஏனெனில்
நான் ஒரு கலங்கிய நீரோடை...

எது வேண்டும்..? எது வேண்டாம்..?
புத்திக்கு தெரிகிறது ...
மனதுக்கு தெரியவில்லை.
ஏனெனில்
நான் ஒரு கலங்கிய நீரோடை...

அத்துமீறிப் போகும் மனதினை
அடக்க மறுக்கின்றேன்...
ஏனெனில்
நான் ஒரு கலங்கிய நீரோடை...

கத்தி முனையில் மரணம் போல்
புத்தி முனையில் மனச்சலனம்
என்னைக்கொல்கின்றது...
ஏனெனில்
நான் ஒரு கலங்கிய நீரோடை...

மனச்சலனத்தின் முன்
புத்தியானது புறக்கணிக்கப்பட்டு விட்டதோ..!
புரியவில்லை...
ஏனெனில்
நான் ஒரு கலங்கிய நீரோடை...

மனச்சலனத்தை
சல்லடையில் விட்டு,
தெளிவாய் ஓட நினைக்கும்
நான் ஒரு கலங்கிய நீரோடை...



-சுரேஷ் சங்கரநாராயணன்

எழுதியவர் : சுரேஷ் சங்கரநாராயணன் (10-Oct-15, 4:25 pm)
பார்வை : 84

மேலே