அந்த சில நாட்கள்
அந்த சில நாட்கள்
அமைதிதான் என் மூச்சு
மகிழ்ச்சிதான் என் பேச்சு
தண்ணீரில் இருந்த போதும்...
கண்ணீரை நான் அறியேன்
இருட்டிலே இருந்த போதும்...
வெளிச்சத்தை நான் மறவேன்
நீபடுக்க நன் உறங்கி
நீவிழிக்க நான் எழுந்து
கவலை யின்றி நானிருக்க..
வலைகாப்பு தந்த வலையோசை
வாடா மலரே ! என்றழைக்க
தாய்க்கு சுமையாக வேண்டாமென்று
தரணியில் வந்து நான்பிறக்க..
அழுதே பிறந்த என்னை
சிரிப்பால் வரவேற்று..
சிரித்தபடி இறக்கும் கணம்
அழுகையுடன் வழியனுப்பும் உலகில்
அழுகைக்கும் சிரிப்பிற்கும்..
இடைப்ட்டதே வாழ் வென
வருந்தும் நேரங்களில் எல்லாம்..
கர்ம வினை காரணம்
என்ற குறல் எதிரொழிக்க..
கர்மவினை காரணம் என்றால்..
கடவுளே நீயெதற்கு? என்ற
விடையில்லா வினாவான வாழ்வில்
தாயே.. உன் வயிற்றில்..
சிசுவாக நான் இருந்த..
அந்த சில நாட்களே..
இன்றும்... இனிக்கிறது..
தெவிட்டாத தேன்மழையாய்..
$ moorthi