பெத்த பாசம் 2 - சகா
![](https://eluthu.com/images/loading.gif)
வாழும் காலத்தில்
வாழும் தெய்வத்தை
வசவு மழை
பொழிந்துவிட்டு...!
வாழ்க்கை முடித்து
மூச்சை நிறுத்தி
முன் கூடத்தில் கிடக்கும்
அம்மாவை பார்த்து...!
அழுது புலம்புகிறான்,
அம்மா என்ன
அனாதையா விட்டுட்டு
போயிட்டியேன்னு...!
அடுத்த கூடத்தில்
ஆலோசனை நடக்கிறது,
அம்மாவின் நகையை
யார் எடுத்துக்கொள்வதென்று...!!!