எனக்காக ஒருபுன்னகை சிந்து

மரணத்தோடு ஒரு போராட்டம்தான் வாழ்க்கை
வாழ்ந்துபார் இந்த உலகம்
உள்ளவரை உன் வெற்றி நிலைத்து நிற்கும் ...

பிறந்துவிட்டோமென்று வாழாதே
மரணத்தின் பின்னும் வாழ்வு
உண்டென்பதை மறக்காதே ..
சாகத்துணிந்தவளே வாழ்க்கையில்
சாதிக்க ஆயிரம் உண்டு

உன்மனம் பலவீனாகும்போதுதான்
பணம் பலமாகத்தான் தெரியும்
தன்னம்பிக்கையை தளரவிடும்போதுதான்
தைரியம் தற்கொலையை தூண்டும் ...

கைகள்யில்லா ஜெசிக்கா காக்கசைப்பார்
ஆகாயத்தில் பறக்கிறாள் உன்னிடம்
காசுதானே இல்லை ..கவலையை
விட்டெறிந்து கால்கொண்டு நட

கைகொண்டு உழை .உடல்நலம்
ஒத்துழைக்கவில்லையா மனத்தை
உறுதியாக்கு அது உன்உடல் வலிமையை
உற்சாகபடுத்தும் .துவண்டு வீழாதே

தோற்றுவிடுவாய் தோல்வியிடம் அல்ல
மரணத்திடம் ..வீரத்திடம் தோற்று
மரணத்தை ஏற்றுக்கொள் ...

ஒருநாள் தானென்று ஈசல்பறக்காமல்
இருக்கிறதா ரோஜாதான் மலரமால்
மாள்கிறதா ....

மீண்டும் மீண்டும் ஜனிக்க பிறந்ததை
மறந்து மரணத்தை தேடி போனதேனோ ?
மங்கையே மனமென்னும் மாயை பிம்பம்
நீ முகம் பார்க்கும் கண்ணாடிபோல்
சிரித்துக் கொண்டே இரு சிந்தித்துக்
கொண்டே இரு விடாமுயற்சியோடு

வானத்தை அண்ணாந்துப்பார் இறக்கை
முளைக்கும் நீயுமொரு நாள்
வலம்வருவாய் சாதனை பெண்ணாய்
மறக்காதே மறந்துமினி மரணத்திடம்
செல்லாதே ...

வெற்றிகண்ட பின்நீ சிந்தும் ஒவ்வொருதுளி
கண்ணீரையும் காணிக்கையாக்கு நற்கவிதையாய் மலரட்டும் .திரும்பிப்பார்
உன்பின்னால் நான்நிற்பேன் தோழியே !
அப்போது எனக்காக ஒருபுன்னகை சிந்து ....

எழுதியவர் : ப்ரியாராம் (12-Oct-15, 12:52 pm)
பார்வை : 86

மேலே