ஏழாவது மனிதன் 8 - நிகழ்வைச் சிதைப்பவன் - கட்டாரி

காட்சிப் பிழைகளுக்கு
பழகிவிட்டது...
பொங்குபுனல் கோபங்கள்
நீர்த்துப்போயிருந்த
வடிகால்கள் வறண்டுபோயும்...
கங்குகளின் இருப்பைச்
சொல்லி...
உதிர்ந்த சாம்பல் ஊதிப் பறத்தியும்
நிகழ்வுகளின் சூத்திரமறிந்து
தேற்றச் சமன்களை
பிழற்றியே பொருத்திக் கொண்டும்...
பதிவுகளை பிழைகளாய்த்
திருத்தியும்..
பிழைகளை பதிவுகளாய்
முலாமிட்டும்....
மழுங்கல் கூர்முனைகளோடு
குவார்ட்டர் பாட்டில்
அரைப்ளேட் பிரியாணிகளோடு
வாழ்வியலை
காட்சிப் பிழைகளாக்கிக்
கடந்துபோகும்... இவன்..
ஏழாவது மனிதன்.....!!