மழையே

மழையே... மழையே... நீ வருவாய்
மக்களின் அழைப்பை ஏற்றிடுவாய்!
ஆறுகள் அணைகள் வழிந்தோட
குளங்கள் கிணறுகள் நிறைந்தோட!

காரிரு மேகம் வாராமல்
கண்கள் குளமாய் மாறிடுமே!
பேரருள் புரிந்து நீவருவாய்
பேரின்பம் நாங்கள் பெற்றிடவே!

காடுகள் அழியுது தீயினாலே
மாடுகள் மடியுது பசியினாலே
குடிக்க தண்ணீர் இல்லாமல்
குடும்பம் குடத்துடன் அலைந்திடுமே!

எங்கும் வறட்சி காண்கின்றோம்
எம்மில் மிரட்சியைப் பார்க்கின்றோம்!
உந்தன் வரவு அவசியம்தான்
உடனடி வருகை புரிந்திடுவாய்!

கோடையில் இடியுடன் வரும்போது
மின்னல் கண்கலில் பாய்கின்றது!
பாடையில் மக்களை இழுக்காமல்
மலையில் அவசியம் நீவருவாய்!

எழுதியவர் : ரவி ஸ்ரீனிவாசன் (13-Oct-15, 12:54 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
Tanglish : mazhaiyae
பார்வை : 154

மேலே