வனம்

வானம் பார்த்த பூமி நாங்கள்
வளம் கொழிக்கும் புதையல் நாங்கள்
வற்றாத செல்வம் தரும்
வானமல்ல.... வல்லலே நாங்கள்!

கோடி உயிர்கள் என்னிடமுண்டு
நாட்டியமாடும் மயில்களும் உண்டு
நாகப் பாம்புகளும் என்னிடமுண்டு!
நாடி வந்தவர்களை காக்கும் குணமுண்டு!

மலைகள் கூட என்னிடமுண்டு
மலர்கள் தரும் நல்வாசனையுண்டு
மயங்க வைக்கும் மான்கள்கூட்டம்
மழை பொழியும் காட்சியும்முண்டு...!

நிலவுக் கூட நீச்சலடிக்கும்
நீரைச் சுமந்த குளங்களுமுண்டு...
பச்சைபசேல் கட்சிகளும்முண்டு
பாசம் பொழியும் விளங்குக்களுமுண்டு!

வானம் பார்த்த பூமிநாங்கள்
வளம் கொழிக்கும் புதையல் நாங்கள்
வற்றாத செல்வம் தரும்
வானமல்ல ... வள்ளலே நாங்கள் !

எழுதியவர் : ரவி ஸ்ரீனிவாசன் (13-Oct-15, 12:44 pm)
சேர்த்தது : ரவி ஸ்ரீனிவாசன்
Tanglish : vanam
பார்வை : 128

மேலே