தோல்வி கண்டு துவளாதே
"தோல்வி கண்டு துவளாதே!"
===================================
சிலந்தி மேலேறி விட்டம் வந்துவிட்டது
சிங்கார லலையை பின்னலிட்டது
அம்மா ஒருமுறை அப்பா பலமுறை
அறுத்தெறிந்தார் ! மீண்டும் மீண்டும
அயராது பின்னிய வலையில்
அன்றைய இரையை ஈர்த்துப் புசித்தது
தோல்வி கண்டு துவளா சிலந்தியுமே!
விட்டத்தில் நிகழ்ந்த விந்தையைக் கண்ட
சின்ன அரும்பு! விடா முயற்சியின்
சிறப்பறிந்தது! வாழ்க்கை சி!றந்ததுவே !