காகிதம்
வண்ண வண்ண காகிதம்
வாழ்க்கைக்கு உதவும் காகிதம்
வடிவம் மாறும் காகிதம்
வசந்தம் வீச காகிதம்...!
புத்தகமாய் மாறும் காகிதம்
புத்துணர்ச்சி தருவது காகிதம்
புதுமை படைக்க காகிதம்
புதியதை படைக்க் காகிதம்...!
அச்சு ஏறும் காகிதம்
ஆணை வழங்க காகிதம்
அரசியல் விளம்பர காகிதம்
அவசியம் தான் காகிதம்!
செய்தி கூறும் காகிதம்
செயல்பட உதவும் காகிதம்
செலவுக்கு உதவும் காகிதம்
ரூபாய் நோட்டு காகிதம்!
'