ஒளியை அருள்வாய்!
இலவசத்தின் இழிவை ஏழை அறிவானோ?
தேவை உள்ள மனிதன் தீமை உணர்வானோ?
உண்மையையும், உழைப்பின் உயர்வையும்,
உலஹெங்கும் பரப்பினால்,
பாமரனும் சாமரம் வீசுவானோ?
எனவே தோழா, உடனே எழுக!
உண்மையாய் உழைக்க, உலகையே அழைப்பாய்!
உண்மை உழைப்பின் ஒளியில்
இலவச இருள் மறைதல் திண்ணம்.
ஏழையின் அறியாமையை நோக்குவாய்;
அதனைப் போக்குவாய்!
பின்னர் நீ நீக்க வேண்டியது ஒன்றும் இல்லை!
பாலு குருசுவாமி