அடையாளமாகும் ஆபரணங்கள்

நகை மோகம் நங்கையரை மட்டுமின்றி இன்று ஆடவரையும் ஆட்டிப்படைகிறது.

பொட்டுத் தங்கம் கூட போடாத நிலையில் பூவையரின் அங்கங்கள் மூலியாக அழுது வடிவது போல் தருவது என்னமோ உண்மைதான். ஆனால் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயவங்கள் புதுப்பொலிவில் ‘நகை’ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ, நம் ஆன்றோர்கள் அந்த அணிகளுக்கு ‘ நகை ‘ என்னும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்கள்.அணி என்னும் சொல்லும் ‘அணிதல்’ மற்றும் அலங்கரித்தல் என்னும் இரு பொருள் தந்து நகைகளுக்கு மறு பெயராக விளங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் பலப்பெண்களை முதிர்கன்னியாக்கி, வனிதையரை வதைக்கும் இந்த வரதட்சணை கொடுமையில் முக்கிய இடமும் பங்கேற்பதும் இந்த நகை என்றால் அது மிகையான நகையல்ல. சரி… இந்த நகைகள்தோன்றின வரலாறும் தொன்மையும் பார்த்தால் சுவையும் வாய்ந்தது.

தொடக்கம்

காட்டு விலங்களை வேட்டையாடி வாழ்ந்த கற்காலம் அது. நம் மூதாதையர் புலிப்பல், யானைத் தந்தம் போன்றவற்றை மிருகங்களின் நரம்புகளாகிய நான்களில் கோர்த்து கழுத்து, இடுப்பு, கைகளில் அணித்திருந்தார்கள்.

காலச்சுழற்சியில் பருத்தி,பஞ்சு, நூல் என்று நாகரிகம் கிளைகளை பரப்பியபோது நரம்புகளுக்கு பதில் நூலில் கோர்த்து அணியும் வழக்கம் ஏற்பட்டது. பின்னர் இயற்கைத்தாய் வழங்கிய முத்து,பவளம், மணி போன்றவற்றில் மனம் லயித்த அவர்கள், அவற்றில் துளையிட்டு கோர்த்து அணியும் நிலைக்கு முன்னேறினர். நூல் என்பதைக் குறிக்க ‘ இழை ‘ என்னும் இன்னொரு தமிழ்ச்சொல்லும் இருந்ததால், அந்நூலில் கோர்த்து அணிந்த அணிகளுக்கு’ இழை ‘ என்று பெயரிட்டனர். காலப்போக்கில் தங்கம், வெள்ளி போன்ற உலோங்கள் பயன்பாட்டிற்கு வந்த பின்னர் அவற்றை உருக்கி இழுத்த கம்பிகளில் மணி, பவளம், போன்றவற்றை கோர்த்து செய்யப்பட்ட போதிலும் அந்த பரணங்களுக்கும் ‘ இழை ‘ என்னும் பழைய பெயரே நிலைத்து விட்டது.

‘யிழை ‘ [ய் + இழை — ஆராய்ந்து செய்த ஆபரணம்]
‘அணியிழை ‘[ அழகிய ஆபரணம் ]
என்பன போன்ற இலக்கிய வழக்கு சொற்கள் இதனை உறுதி செய்கின்றன. இதே முறையில் முறுக்கிய கயிறு என்னும் பொருள் தரும் ‘வடம்’ என்னும் தமிழ்ச் சொல், பழங்காலத்தில் கயிற்றில் உருவான ஆபரணங்களை குறித்து நின்றது. இன்று பொற்கம்பிகள் முறுக்கி செய்த ஒருவகை அணிகலனுக்கு ‘வடம்’ என்னும் அந்த பழம் பெயர் வழங்குவதை அறிவோம்.

அடையாளத்திற்காக தோன்றிய அணிகள் அக்கால மக்கள் செயற்கரிய ஒரு செயலை செய்துமுடிக்க உறுதி பூணுங்கால், அதன் நினைப்பு எப்போது தமக்கிருக்க வேண்டும் என்ற குறிகோளில் தம் முன்னங்கைகளில் ‘ கங்கணம் ‘ என்னும் ஒரு வகை வளையத்தை அணிந்தனர். இன்றும் கூட ‘ஒரு காரியத்தை செய்து முடிப்பேன்’ என்று அக்கருமத்திலேயே கண்ணாக இருப்பார்கள். அவர் கையில் எதுவும் கட்டாவிடினும் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார் என்று குறிப்பிடுகிறோம் இல்லையா? அந்த கங்கணத்தின் மறு வார்ப்பு தான் பின்னால் உருவான காப்பு, கடகம், வளையல், வங்கி போன்ற கையணிகள். பண்பாடத காட்டுப்பாதைகளில் படுத்து உறங்கும் பாம்பு போன்ற நச்சுப்பிராணிகளில் அரவம் கேட்டு விலகவும், புள்ளினங்கள் காலடியோசை கேட்ட மாத்திரம் பயந்தோடவும் அக்கால ஆடவரும் மகளிரும் கால்களில் அணிந்திருக்கும் அணிகலன் சுழலும், தண்டையும், சிலப்பும் இன்று எல்லோருமே அணியும் மோதிரத்தின் முன்னோடிதான் பழைய கணையாழி. அன்றைய அரச குடும்பத்தாரும், அரச கட்டளையை நிறைவேற்றும் அமைச்சர்,தளபதி, தூதர், ஒற்றர் போன்ற பொறுப்பான பதவியினரும் மட்டுமே கணையாழி அணிவர். ஆழி என்பதற்கு ‘சக்கரம்’ என்று அர்த்தம்.

கண்ணபிரானது சக்கராயுதம் போல அரசனின் ஆணை சக்கரம் அவனது ஆட்சி எல்லைக்குள் விரைந்து பாயும் என்பதால், மன்னனின் ஆணையை செயல்படுத்தும் அதிகாரிகள் இன்றைய அடையாள அட்டைகள் போல அவற்றைப் பயன்படுத்தினர். பின்னாளில் விரலுக்கு அழகு சேர்க்க விரும்பிய எல்லோருமே அணியத் தொடங்கியதும் அது மோதிரமாகி விட்டது.

அங்கலெல்லாம் தங்கமாக மின்னவேண்டும் என்ற பரண மோகம் சங்க காலத்திலேயே மங்கையர் மனத்தில் புகுந்துவிட்டது போலும். கால் விரலில் அணியும் மெட்டி முதல் சுருங் கூந்தல் வகிட்டில் தொங்கும் நெற்றிச்சுட்டி வரை என்று பாவலர்கள் அணிகளின் பெயரால் ஐம்பெருங்காபியங்களை க்கித்தரும் அளவுக்கு அன்றே நகை மோகம் இருந்திருக்கிறது.

அயல் நாடுகளில் அந்நிய செலாவணிக்கே பயன்படும் தங்கம் ஆடம்பர சின்னங்களாய் நம்மவர்கள் அங்கங்களில் அடைந்து கிடக்கின்றன. ” நான் விரும்புவதெல்லாம்
அணிகலன் ஆடம்பர மின்றி அசோக வனத்தில் இருந்த சீதையைத்தான் ” என்ற அண்ணல் காந்தியின் தங்கத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்.

இன்றைய நவ நாகரீக அணிமணிகலனுக்கு நமது கோவிலுள்ள சிலைக்கு அணிவிக்கப்பட்ட நகைகளின் மறு பதிப்பு கூட கூறலாம்.

‘ கோவில்களுள் கோவில் ‘ என்றும் ‘ தேவாலய சக்கரவர்த்தி ‘ என்றும் ‘தென் திசை மேரு ‘ என்றும் அழைக்கப்படும் இராஜ ராஜீசுவரம் கோவிலை எழுப்பியவர் முதலாம் இராஜாராஜன். இந்தப் பேரரசர் ஒரு பேராற்றலின் மொத்த உரு. இவருடைய 29 ஆண்டுக்கால ஆட்சியில் 20 ஆண்டுகள் பேரரசை விரிவடையச் செய்வதிலேயே கழிந்தன. கடைசி பத்து ஆண்டுகள் இவர் கோவில் கட்டுவதிலும், கலை வளர்ப்பதிலும் கவனத்தை செலுத்தினார். இந்தக் காலக் கட்டத்தில்தான் தமிழரின் கலைகள் வளர்ச்சியடைந்தன. காலம் காலமாக இருந்து வந்த சிற்ப, கட்டட அணுகு முறைகளில் மாறுதல் வந்தன. உலோகத்தை உருக்கி சிலைகள் செய்யும் கலை விரிவடைந்ததும் இந்த மாமன்னரின் கடைசி பத்து ஆண்டு ஆட்சிதான்.

52 கோவில்கள் கட்டப்பட்டன். 66 படிமங்கள். அவற்றில் இராஜ ராஜன் அளித்தவை 23.

தஞ்சை இராஜராஜீசுவரம் கோவிலின் சுவர்களில் உள்ள கல் வெட்டிகளின் வழியே அக்காலத்தில் பெண்டிரும் ஆண் மக்களும் அணிகலன்கள் பூணுவதில் இப்போது போல் அப்போது மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அப்போது அணிந்து மகிழ்ந்த நகைகளின் மாதிரியில் தானே கோவிலுக்கு அணிகலன்களை அளித்திருக்க முடியும்? அதனால் கல் வெட்டுகளில் காணப்படும் நகைகள் அந்த நாள் நடைமுறைப் பாணியில் இருந்தவை எனக் கொள்ளலாம்.

கல்வெட்டுகளின் படி அப்போது பயன்பாட்டில் இருந்து கோவிலுக்கு அளிக்கப்பட்ட சில
நகைகளின் பெயர்கள் :–

ஏகவல்லி [கழுத்து அணி – ஒற்றைச் சரமாலை]
காறை [கழுத்து அணி ]
கச்சோலம் [ இடை அணி]
கலாவம் [இடை அணி]
காந்த நாண் புள்ளிகை [கழுத்து அணி]
மோதிரம் [இரத்தினம் முத்து ]
முத்து மாத்திரை [காது அணி]
பஞ்சசாரி [ஐந்து சங்கிலி கொண்டது ]
பதக்கம்.

என்கிறது கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள பேரரசர் இராஜ ராஜனின் ஆணை. இதில் சிறப்பு என்ன வெனில் ஒவ்வொரு அணிகலனின் முழுவிபரமும் குறிக்கப்பட்டுள்ளது. நகையின் எடை, அது செய்யப்பட்ட தன்மை,
அதில் பொருந்திருக்கும் முத்து,பவளம், வைரம் போன்றவற்றின் விபரம், அதன் மாதிரி ஆகிய எல்லாம் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருகின்றன.

எடுத்துக்காட்டாக பேரரசர் இராஜராஜன், ஒரு தெய்வத்திற்கு 16 தங்க வளையல்களை அளித்திருந்தார். அவை ஒவ்வொன்றின் எடை ஐந்து கழஞ்சி ஆறு மஞ்சடி. ஒவ்வொரு வளையலிலும் ஏறத்தாழ 316 முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன அவற்றின் எடை 155 கல்.

இந்த பதினாறு வளையல்களின் மொத்த மதிப்பு 403 காசுகள். பேரரசரின் பட்டத்து அரசி லோக மகாதேவி 13 வகை நகைகள் அளித்திருந்தார். அவற்றில் 471 முத்துக்களும் 20 பவளங்களும் இருந்தன. பேரரசர் மாத்திரம் கொடுத்திருந்த நகைகள் 42,000 கழஞ்சுப் பொன்.

அணிகலன்களில் பயன்படுத்தப்பட்ட தங்கம், முத்து போன்றவை எப்படி எடை போடப்பட்டனஎன்ற செய்திகளும் தரப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட
”குடிஞைக்கல்” முறையில் ”ஆடவல்லான் மேரு விடங்கன் ” என்ற பெயர் கொண்ட கல்லாலும் எடை போடப்பட்டன. அணிகலன்களை நிறுக்கும்போது, நகைகளின் சரடு, சட்டம், செப்பாணி, அரக்கு ஆகியவையும் நகைகளின் பகுதிகளாகவே கொண்டு எடை போடப்பட்டன என்கின்றன கல்வெட்டுகள். தங்கத்தின் மாற்று
அளவிடப்பட்டது பற்றிய சுவையான செய்தியும் காணப்படுகிறது. பேரரசர் அளித்த பொன் நகையில் தரத்திற்கு கால் மாற்று குறைவாகவே இருந்ததாம்.

தண்டவாணிக்கு கால் கால் காந்திகை ( கழுத்து அணி)
கடகம்,கொப்பு ( காதணி)
மகுடம், குதம்பை ( காதணி)
பட்டம் (மகுடம்)
பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்)
சப்தசரி ( ஏழு சங்கிலிகள்)
சிடுக்கு, சூடகம் (வளையல்)
பாத சாயலம் ( கால் அணி)
சூரி சுட்டி (நெற்றியில் அணிவது)
வீரப்பட்டம் (தலையில் அணிவது)
வாளி (காதணி)
காறை கம்பி (காதணி)
திருகு, மகரம் (காதணி)
உருட்டு திரிசரம் ( கழுத்து அணி)
தூக்கம் (காதணி)
நயனம் (கண்மூடி)
பொற்பூ,பொட்டு.
பாசமாலை
தோள் வளை
தாலி
தாலி மணிவடம்
தாழ்வடம்
தகடு
திரள்மணி வடம்
வளையல்
வடுக வாளி
வடம்
தோடு
திருவடிக்காறை
கால் வடம்
கால் மோதிரம்
சன்ன வடம் திருகு
கால் காறை
கைக் காறை மாலை

பயன் படுத்தப்பட்ட முத்துக்களில் 23 வகையும் இரத்தினங்களில் 11 வகையும், வைரங்களில் 11 இருந்தன என்று தெரிகிறது. சில நகைளின் பயன்பாடு இப்போது வழக்கில் இல்லாது போய்விட்டது.

இப்படி மிகுந்த இறை உணர்வுடனும் கலைச் சிந்தையுடனும் உருவாக்கப்பட்ட படிமங்களும் அவற்றிற்கு அணிவித்து அழகு பார்க்க அளிக்கப்பட்ட அணிகலன்களும் உலகின் எந்தக் கோடியில் உள்ளனவா… தெரியவில்லை.

அணிகலன்

பெண்கள் ஏன் நகைகளை குறிப்பாக தங்க நகைகளை, ஆபரணங்களை விரும்பி அணிகிறார்கள். முதலில் ஒரு பாலியல் ஆய்வாளர் சொல்வதைக் காண்போம் :–

ஆதி காலம் தொட்டே பெண்களின் கவர்ச்சிரமான உடல் அம்சங்களை குறிப்பால் உணர்த்தி ஆண்களின் கவனத்தை கவர்ந்து அவர்களை மகிழ்விப்பதற்காக ஆடை அணிகலன்களாக பெண்கள் ஆபரங்களை அணிகிறார்கள். பெண்கள் ஆபரணங்கள்
அணிவது ஆண்களுக்குத்தான்.

பெண்கள் அணியும் ஒட்டியாணம் அவர்களுடைய குறுகலான இடையை வெளிப்படுத்தும்.

கழுத்தில் அணியும் சங்கிலி, நெக்லஸ் போன்றவை பெண்களின் மார்பழகை உயர்த்துவத்துடன் மார்பு மேட்டின் கவர்ச்சியையும் வெளிப்படுத்த உதவுகிறது.

அதேபோல், காதணி கவர்ச்சிகரமான காதமைப்பையும், மூக்கு அணிகள் மூக்கின் அழகை எடுத்துக் காட்டவும் உதவுகிறது.
பெண்களின் கவர்ச்சிமிக்க பகுதியில் கால் பாதங்கள் முக்கியமானவைகள் அதனால்தான் சிலம்பு, கொலுசு, மெட்டி இவற்றை அணிந்து ஆண்களின் கவனத்தை கவர்கிறார்கள்

[ பழைய காலத்தில் பெண்களின் மிக முக்கிய கவர்ச்சி பகுதியை சுட்டிக்காட்ட இடையில் முன்புறமாக ” மேகலை ” என்ற ஆடையை அணிவார்கள் இப்போது அதுவே ‘ ஸ்விம் சூட்’ ஆகிவிட்டது]

சரி…. இது பாலியல் ஆய்வார்கள் கருத்து.

இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன் எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை காண்போம்.

நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ¡£தியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது. நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச் செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பது காலங் காலமாய்ப்
பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும்.
[பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.]

ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.

அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.
பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது
என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்.

பொதுவாக, உடல் ¡£திராக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு.
உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.

[சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்]

அரைநாண்க் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / — ] சம நிலைக்கு
கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.

மகாபாரத்தில் திருடாஸ்தரன் தன் மகன் துரியோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு சீர்வாதம் செய்து, வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன் துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்க்கொடியால் இடுப்புக்கு கீழ் சீர்வாதம் வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே. இந்த அரைநாண்க்கொடி உடல் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது.

மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ]

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,
பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.
அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு
அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.
இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.
ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.
இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.
இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா
சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.
உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):-

1. தலையணி:
தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.

2. காதணி:
தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,
கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.

3. கழுத்தணிகள்:
கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,
நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.

4. புய அணிகலன்கள்:
கொந்திக்காய்.

5. கை அணிகலன்:
காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.

6. கைவிரல் அணிகலன்கள்:
சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.

7. கால் அணிகலன்கள்:
மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.

8. கால்விரல் அணிகள்:
கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.

9. ஆண்களின் அணிகலன்கள்:
வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைநாண்,
பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம்,
கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,
முத்து வடம், கடுக்கண், குண்டலம் ஆகியனவாகும்.

(குறிப்பு உதவி)..நன்றி: தமிழ் நாட்டு அணிகலன், சாத்தான் குளம் அ. இராகவன்)

எழுதியவர் : படித்ததில் பிடித்தது - எழி (18-Oct-15, 8:15 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 173

சிறந்த கட்டுரைகள்

மேலே