ஏன் மறுக்கிறாய்

என்னை பற்றி என்னை விட அதிகம் உனக்கு தெரிந்ததாலோ
என்னவோ ஒவ்வொரு முறையும் அழுகிறேன் - ஆனந்தமாக
புரிந்தாவது கொண்டாயே என்பதற்காக

புரியாமல் தவித்த எனக்கு புரிந்தது
உனக்கு புரியவைக்க இயலாதென்பது

தெளிவாக நடிக்கும் உன்னிடம் எப்படி கூறுவது
உன்னை கண்டதால் தான் குழப்பத்தில் தவிக்கிறேன் என்று

புரிந்துகொள்ளும் படி கட்டாய படுத்தவில்லை
உணர்ந்த என்னை ஏன் மறுக்கிறாய்

பதில் கூறு
காதல் வேண்டாம்
கண்ணீராவது மிஞ்சட்டும்

எழுதியவர் : ரா. கனி (18-Oct-15, 8:57 pm)
சேர்த்தது : ரா கனி
Tanglish : aen marukiraai
பார்வை : 498

மேலே