அதிர்ஷ்டம்
விதை எதுவோ
அதுவே முளைக்கும்..
விதி எவ்வசமோ
அவ்வசமே நடக்கும்..
கருவோடு உருவாவது
எல்லாம் புவிதொடுவதில்லை ..,
முட்டி மோதி முயற்ச்சிபவர்
பலரும் ஜெயிப்பதில்லை ...,
கற்றவர் யாவரும்
சபை கண்டதில்லை ...,
அறம் புரிபவர் பலர் மனம்
அமைதிகூட காண்பதில்லை ..
அதிர்ஷ்டம் என்ற
காற்று தீண்டாமல்
மண்ணோடு மண்ணாக
மக்கிப்போன
கவிங்கர்கள்,கலைங்கர்கள்,
அறிஞர்கள் ,அறிவாளிகள்
ஏன்...
காந்தியும் ..கலாமும்
கூட எத்தனை எத்தனை
பேரோ..??!!
இவ்வுலகு அறியாது,,,
அதிர்ஷ்டம் தீண்டிய
கல்
கோவில் கருவறையில்
கடவுளாய் ...,
அதிர்ஷ்டம் தொட்ட மலர்கள்
இறைவன் திருவடியில் ..
அது இல்லா மலர்கள்
பிணத்தின் கல்லறையில் ...
மன்முட்டி முளைக்கும்
செடி கூட மரமாவதும்
ஆட்டிற்கு இரையாவதும்
அதிரிஷ்டமே ..
கல்வி .உழைப்பு,முயற்சி
நற்சிந்தனை .நலெண்ணம்
பக்தி ,பணிவு,கனவு
இவையெல்லாம் ஒன்றுகூடி
இருந்தும் -அதிர்ஷ்டம் என்ற
ஒற்றைசொல் சேராததால்
விடியலை தேடும் விட்டில்பூசியாய்
தரையில் துடிக்கும் மீனாய்
இறைச்சி கடையின் கூண்டில் கோழியாய்
பலர்...
அதிர்ஷ்டம் என்ற காற்று
தொடாத எவரும் -உயிருடன்
நடக்கும் பிணமே ..!!!
நானும் ஒரு பிணமாய்
வெறும் கனவுகளோடு ....
என்றும்..என்றென்றும் ...
ஜீவன்