காத்திருக்க வைக்கிறாய்
என்னுயிரே !....
உன்
முகம் காணாமல்
ஒரு நாள்
அலைபேசியில் –உன்னை
அலைக்களித்தேன்......
அதற்காகவா இன்று
என்
மனதைப் பறித்து
உயிரை உருக்கி
ஒவ்வொரு கணமும் –நான்
அனுப்பி வைத்த
அலைபேசி எடுத்து
என்றாவது ஒருநாள்
உந்தன் குரல்
கேட்க்க அழைப்பாய் –என
காத்திருக்க வைக்கிறாய்.......
- தஞ்சை குணா