கல்யாண சந்தை
கல்யாணசந்தையிலே
சுற்றி நான் பாக்கையிலே
கண்ணில் பட்ட காட்சியெல்லாம்
என் விழியோர அருவிகளாம்
ஊனமில்லா மகனுக்கோ
உறவாடும் கூட்டம்
போட்டி போடும் அவலம் தானே
ஊனமுள்ள மகனுக்கோ
தள்ளுபடி பேரங்களாம்
ஊனமுள்ள மகளுக்கோ
விஷம் போன்ற பேரங்களாம்
ஏன் இந்த முரண்பாடுகள்
அனைவரும் மனிதம் தானே