இளைய தலைமுறை

பூவாய் மலரச் சொல்லித் தந்தது
பழைய தலைமுறை;
எருக்கம்பூவாய் இருக்கத் துடிக்குது
இளைய தலைமுறை;

உள்ளங்கைக்குள் உலகம் வந்தது,
ஒழுக்கம் போனது கை நழுவி;

கள்ளத்தனத்தைக் கற்றுத்தேர்ந்திட,
அரசே கொடுக்குது மடிக்கணனி;

ஆர்வத் துடிப்பால்
அலையுது ஆண்பால்;
ஆன்லைன் பிணைப்பால்
தொலையுது பெண்பால்;

பண்பை வளர்க்கத் தவறியபின் பெறும்
அறிவால் மட்டும் பயனுண்டோ???
இதயம் இருக்க வேண்டிய இடத்தில்
“இணையம்” இருந்தால் பலனுண்டோ???

மனிதா...! மனிதா....! மாறிவிடு.....!!
முக நூல் முகத்தை மறந்துவிடு.....!!

குடும்ப உறவில் மகிழ்ந்திருக்க
“கூகுள்”-ஐக் கொஞ்சம் தவிர்த்துவிடு...!!

அறிவைத் தேடும் ஜன்னலது;
அதுவே வாசல் ஆகாது...!
ஆன்லைன் வாழ்வே நிரந்தரமாய்- நீ
அழிந்து போகக் கூடாது....!!

எழுதியவர் : இரவி (20-Oct-15, 2:41 am)
Tanglish : ilaiya thalaimurai
பார்வை : 193

மேலே