வானம் உன் கைகளுக்குள்

வானம் உன் கைகளுக்குள்
பாவலர் கருமலைத்தமிழாழன்
பூந்தென்றல் வீதியுலா
புறப்பட்டு வருவதற்கே
ஏந்திவரும் பல்லக்கை
எதிர்பார்த்தா காத்துளது ?

காரிருளை மாய்ப்பதற்குக்
கதிரவன்தான் காலைவர
தேரினையா எதிர்பார்த்துத்
தெருமுனையில் காத்துளது ?

கண்களினைப் பறிக்கின்ற
கார்மேக மின்னல்தான்
மின்சாரம் எதிர்பார்த்தா
மின்னுதற்குக் காத்துளது ?

தானிறங்கி வருவதற்குத்
தரையிருந்து குழாய்இணைப்பு
வானிற்கு வருமென்றா
வளமழையும் காத்துளது ?

சாதனைகள் புரிவதற்குச்
சந்தர்ப்பம் வாய்க்குமென்று
சோதனைகள் செய்யாமல்
சோம்பலுடன் இருப்பதுவோ ?

வாய்ப்புகளோ உனைத்தேடி
வரவேற்பு கொடுக்காது
வாய்ப்புகளை உருவாக்கு
வானம்உன் கைகளுக்குள் !
THY SKY ,
WITHIN THY HANDHOLD !

Does the gentle breeze wait for any palanquin
To take up a procession in streets ?
Does the Sun that drives out darkness
Wait for any Chariot to come up in the early morn?
Does the Lightning that plucks our eyes
Wait for any power to glitter it in dark – rain clouds?
Does the Sky – rain that fertile our earth
Wait for any pipeline unto the sky to come down?

Want th achieve something in life ?
Want to shine like others in wealth?
Is it proper to wait for any opportune chance
In languor, without any tryout?
Nay, and never the chance will search for thou
To give a warm-heart welcome and embrace !
Try! And try thyself to create the chance, then
The Sky too lie in thy handhold !

(எழுத்து இணைய தளத்தின் மூலம் திரு. அகன் அவர்கள் தொகுத்த தமிழ் கவிதை மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் தொலைந்து போன வானவில்லில் இடம் பெற்றுள்ள என்னுடைய கவிதை.)

எழுதியவர் : (20-Oct-15, 6:46 pm)
பார்வை : 556

மேலே