காதல் வந்தால் கம்முனு கிட

கண்ணொடு
கண்ணினை
நோக்கின்
காதல்?

மனதுள்
வசீகரம்
மயக்கும்
ரீங்காரம்

மௌனமே
சிங்காரம்
மொழிபேசும்
விழிவழியே
புரிந்துணர்வு
ஒப்பந்தம்.

உதடுடன்
உதடு பேச
உதவி எதற்கு.?
உம்மென இரு.

காதல்
கனியட்டும்
கம்முனு
கிட....

எழுதியவர் : செல்வமணி (20-Oct-15, 7:09 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 85

மேலே