காதல் 144
தேடித்தேடி
காதலித்து
தெம்மாங்கு
பாட்டுப்பாடும்
மனசுக்குள்
தினம் தினம்
தெவிட்டாத
தேனிசை..
சத்தம் போடாதே
என்றால் காதலி.
ஆம்,
காதல் என்பது...
அவளை பொருத்தவரை
ஒரு அந்தரங்கம்
பாதுகாக்கப்படவேண்டிய
ரகசியம்.
ஆனால்
எனக்கோ
அது விளம்பரம்;
நண்பர்களும்
நண்பிகளும்
அறிந்து ஒதுங்க
நான் தேடும்
தனிமை சுதந்திரம்...
அதனால்,
மூடச் சொன்னாள்
மூடி விட்டேன்,
மூடினாலும்
முனகுகிறது வாய்
அவளையும்
அவளுக்கான கவிதைகளையும்..

