காதல் சு-தந்திரம்

எல்லோரும் சொன்னார்கள்:
காதல் பொன் போன்றது,
கடமை கண் போன்றது.

என் கடமையை நான் உணர்ந்தேன்,
உடன் விழைந்து தேடினேன்,
எனக்கும் காதல் வேண்டி.

அன்று.

வேண்டிய வரமும் கிடைத்தது,
பத்திரமாய் வைத்துக்கொள்
என என் மனதை
கொடுத்ததும் தான்
அறிந்தேன்,

"சுதந்திரம் என்பது
சில நிபந்தனைகளுடன்,
வரைமுறைகளுடன் " என.

காதல் ஆட்கொண்டதும்
அடிமை ஆனதும்
ஒரு புதிய சிக்கல், மனதினுள்.

எது தேவை
சுதந்திரம் அல்லது சுகம்
ஒன்றிருந்தால் ஒன்றில்லை;

எனக்காக என்னை
நானே இழப்பதா?
தவித்தேன், தகித்தேன்,
துடித்தேன், துவண்டேன்.

இன்றோ ......
விலை இல்லா
பொருளாகி விட்டதே
என் காதல்!

வாங்கிய
அவள் ஒருத்தியும்
திருப்பி தந்துவிட்டாளே
அடி உதையுடன்,,,!

"சுட்டால் தானே தெரிகிறது
தொட்டால் சுடுவது நெருப்பென்று..."

எழுதியவர் : செல்வமணி (20-Oct-15, 6:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 222

மேலே