நலந் தரும் நவராத்திரி நாயகி கலைவாணி

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
-------------கபடு வராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
________கழுபிணியி லாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
-------------தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
------------தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
-----------துன்பமில் லாதவாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
----------தொண்டரோடு கூட்டுக்கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
---------ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
---------அருள்வாமி அபிராமியே !

----கலைவாணி வடிவாய் போற்றி நாளும் நலந் தருவாள்
அன்னை அபிராமி என்று சொல்லும் பட்டர் அருளிய
அபிராமிப் பதிகம் .
இறை நம்பிக்கை உள்ளவர்கள் படிக்கவும். பயன்
பெறுவீர்கள்
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தவிர்க்கவும்.
விரும்பினால் படிக்கவும்
இருள் மதியிலும் வெண்மதியை நிறுவுவாள்.

எழுதியவர் : அபிராமிப் பட்டர் (21-Oct-15, 8:54 am)
பார்வை : 160

மேலே