சலசா இங்க வாடி

பாட்டி எம் பேரு ஜலஜா. நீங்க எம் பேரத் தப்புத் தப்பா உச்சரிச்சு என்னக் கூப்படறது கொஞ்சங்கூட நல்ல இல்ல பாட்டி.


ஏண்டியம்மா வாயில நொழையாத பேர உனக்கு வச்சிருக்காங்க. அதுக்கு நா என்ன செய்யறது? சரி அந்த சலசாங்கற பேருக்கு என்ன அர்த்தம்னுவாது தெரியுமா?


தெரியும் பாட்டி. ஜலஜா-ன்னா தாமரைன்னு அர்த்தம்.


அடிப்பாவி, தாமரைங்கறது அழகான பேராச்சே. அத விட்டுட்டு வாயில நொழையாத கண்ட பேர உனக்கு வச்ச உங்கப்பனுக்கும் அம்மாவுக்கும் புத்தி கெட்டுப் போச்சா.



++++++++++
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (22-Oct-15, 7:18 pm)
பார்வை : 150

சிறந்த நகைச்சுவைகள்

மேலே