பேய்களின் திருமண அழைப்பிதழ்

பேய்களின் திருமண அழைப்பிதழ்:-
*
நிகழும் மங்ளகரமான மூதேவி ஆண்டு நாதாரி மாதம் நிறைந்த அமாவாசை அன்று பரதேசி நட்சத்திரத்தில்
*
*
*
எழும்புக்கூடு பேரனும், மண்டை ஓடு மகனுமாகிய செல்வன்!!
"சாத்தான் சாக்கடைMA,M.Ed, in(killed)"
என்ற மணமகனுக்கும்.....
*
*
குட்டிச் சாத்தான் பேத்தியும், கொல்லிவாய் பிசாசு மகளுமாகிய செல்வி
"ஜகன் மோகினிMCA,"
என்னும் மணமகளுக்கும்......
*
*
நள்ளிரவு 1.00 மணியளவில் கொல்லி மலையில் உள்ள சுடுகாட்டில் பேய்களால் நிச்சியிக்கப்பட்டு பாளடைந்த பங்களாவில் நடைபெறும் நாதாரித் திருமணத்தில் தங்கள் சுற்றமும் நட்பும் கூடி வருகைத் தந்து மணமக்களை செருப்பாலும் தொடப்பக்கட்டையாலும் அடித்து "நாசமாகபோ" என மனதாற திட்டவேண்டுமாய் அனைவரையும் அழுகையுடன் அழைக்கிறோம்.
*
நிகழ்ச்சி குறிப்புகள் :
1.
இரவு 2 மணி முதல்
3 மணி வரை
பேய்கள் நடத்தும்
*
நரகத்தில் அதிகம் நாசமாப்போவது ஆண்பேயா? பெண்பேயா?
என்ற பட்டி மன்றமும்.......
*
2.
இரவு - 3 மணி முதல்
4 மணி வரை மணமகள் ஜகன் மோகினி ஊர் வலமும்.............
அதனைத் தொடர்ந்து
ஓலம்,ஒப்பாரி மற்றும் எழும்பு கூ நடனமும் நடைபெறும்
*
*
*
இரவு 4.00 முதல் 4.30 வரை நாய் வடை, தவளை சாம்பார், பாம்பு பாயாசம், புழு புளி சோறு, பல்லி பொறியல்,ஓணான் கூட்டு மற்றும் மனிதன் இரத்தத்துடனான விருந்து நிகழ்ச்சி நடைபெறும்..............
*
குறிப்பு:
திருமணத்திற்கு வரும் அனைவரும் சாலையில் செல்லும் பேருந்தில் ஏற வேண்டாம்.
பேருந்து உங்கள் மீது ஏறினால் போதும் நீங்கள் தானாகவே நாங்கள் நடத்தும் திருமண நிகழ்ச்சிக்கு வந்து சேரலாம்....

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு - பாலு (22-Oct-15, 10:40 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 239

சிறந்த நகைச்சுவைகள்

மேலே