வானவில்லில் வண்ணமாகிப் போகிறேன் - உதயா

உணர்வில் ஊற்றெடுத்த
கணநேரம் தாகம் தீர்க்கையில்
கிடைத்துவிட்ட முத்துகள்
காலத்தின் சூழ்ச்சியில்
சிக்கிப்போன
உன்னத தாயின் வித்துகள்
சிறகு முளைக்காத
சிட்டுகளாகவே
சிதறிப்போய்கிடந்தன...!
எங்கோ இரக்கத்தை
சிறகாக வளர்த்துக்கொண்ட
மனிதங்களின் ஆதரவில்
சிட்டுகளின் சிறகுகள்
ஆனந்தமாய்
துளிர்த்தன...!
விவரங்கள் புரியாதவரை
தினப் பொழுது
புன்னகையில் மூழ்கிறது..!
விவரங்கள் புரிந்தப்பின்
தினப் பொழுது
கண்ணீரில் மூழ்கிறது..!
பக்குவப்பட்ட மனது
புது பாசம் தேடி
பறக்கிறது..!
பாதிப்படைந்த மனது
பாசமே வேசமென
யாவரையும் வெறுக்கிறது..!
ஒவ்வொரு முறையும்
கையில் எதையோ ஒன்றை
பற்றியவாறே பயணிக்கிறேன்
அந்த சிட்டுகளின் உலகிற்கு
உண்மையான பாசத்துடனும்
பலரின் கண்களுக்கு
பல உறவெனும் நேசத்துடனும் ..!
காரணம்
உறவுகளின் நாம உச்சரிப்பில்
ஒரு கணம் உண்மையாய் வாழ்ந்துவிட ...!
இமயம் தேடி சென்றபின்னும்
கிடைக்கா உண்மை ஆனந்தத்தை
நிம்மதியை அனுபவித்துவிட ...!
அந்த கடவுகளின் புன்னகையில்
பல துளி தேனினை சேர்த்துவிட ...!
அதை பூக்களில் சிந்தவிட ..!