எனக்கு பொறாமையா

எனக்கு பொறாமையா

உன்னோடு பேசுகிறேன்........

நீ என்னோடு பேசும்போது
எவரோடு பேசினாலும் எனக்கு கவலை இல்லை.
சண்டையிட்டு என்னோடு பேசாத போது
வேறு எவரோடும் பேசி அவர்களை
என் எதிரி ஆக்கி விடாதே என்றேன்.

உனக்கு ஏன் இந்த பொறாமை என்றாய்..?

அது பொறாமையாய் இறுக்க முடியாது
ஆனால் என்னால்
பொறுமையாகவும் இறுக்க முடியாது என்றேன்.

சரி... சரி.. என்று சிரித்துக் கொண்டே என்னை
சிறை வைத்து விடுகிறாய் உன் விழிகளுக்குள்.

நீ என்னோடு பேசும் வரை ........

எழுதியவர் : parkavi (23-Oct-15, 2:21 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 250

மேலே