சண்டைக்காரி
காதலில்லாதது தேசமுமில்லை
காதலிக்காதது தேகமுமில்லை.....
***************
காதல் பிடிக்காதது போல்
நீ
ஒதுங்கிய தருணங்களில்
இரத்த நாளங்கள்
தாலம் போட்டு சொன்னது,
இவளை காதலி
இவள்தான் உந்தன் காதலி...
***************
வாய் பேசுவதற்கு
காது கேட்பதற்கு
கண் பார்ப்பதற்கென்று
சொல்லித்தர ஆட்களுண்டு,,,
இதயமொன்று உண்டு
அது நேசிப்பதற்கென்று
சொல்லித்தந்தவள் நீயே நீயேதானடி...
*****************
காதல் விசித்திரமானதுதான்,
சண்டைக்காரி மீதுதானே
இன்றென்னை சாய வைத்துள்ளது...
******************