ஆறாம் அறிவுக்கு அப்பால்

அழுக்கை கங்கை கொண்டுதான்
புனிதமாக்க வேண்டும்
பேயை வேப்பிலை கொண்டுதான்
விரட்டவேண்டும்
மூடநம்பிக்கையை அறிவுக் குடுவையில்
இட்டுத்தான் சோதிக்கவேண்டும்
இறை வணக்கத்தை நீ நம்பிக்கையால்தான்
வளர்க்க வேண்டும்
அறிவின் ஆற்றலை நீ சிந்தனையால்
விளக்கவேண்டும்
ஆறாம் அறிவுக்கு அப்பால் உள்ள அதிசயத்தை
என்றோ ஒருநாள் நீ உணர்ந்துதான் ஆகவேண்டும் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (24-Oct-15, 10:15 am)
பார்வை : 91

மேலே